அன்பிற்காக ஏங்கி !!


 மழைக் காலத்து வானவில்போல்தான்

சிலரது நேசமும்

இடையில் கலைந்து சென்று விடுகிறது 


ஒருவர் விலகிச் செல்வதை

உணர்ந்துகொள்ள முடியாத

முட்டாளாக 

நீங்கள் இருப்பதால்தான்

கண்ணீருக்கும் 

பிடித்தவர்களாகிவிடுகிறீர்கள் 


உங்கள் மன உணர்வுகளை

புரிந்து

கொள்ளாதவர்களிற்காக

நிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள் 


அவர்கள் உங்களை 

அழைத்து 

பேசப்போவதில்லை எனத் தெரிந்தும்

அவர்களிற்காக 

ஏன் இந்த 

வெற்றுக் காத்திருத்தல்கள்


ஒருவரில் நீங்கள் வைத்த

அன்பிற்காக

உங்களில் நேசங்கொண்டோரையும் 

வெறுப்பதா.?


சிலர்

எவ்வளவுதான்

உதாசீனப்படுத்திச் சென்றாலும்

அவர்களை விலகியிருக்க

முடிவதில்லைதான் 


அதற்காக 

காரணமின்றி 

விலகிச் செல்வோரின்

அன்பிற்காக ஏங்கி

உங்களையே நீங்கள் 

ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் 


நீங்கள் தவித்தழும்போது

கண்டு கொள்ளாதவர்கள்

ஓர் நாள் உங்களை 

தேடி வருவார்கள் என்றா 

நம்புகிறீர்கள்....


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.