2000 வீடுகள் சீன உதவியில் நிர்மாணிப்பு!!

 


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கஆலோசனை வழங்கியுள்ளார்.

திறைசேரிக்குச் சுமை ஏற்படுத்தாமல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு மாற்று வழிகளைக் கடைப்பிடிக்குமாறும் அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் 4074 அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் சீனக் குடியரசின் மானியமாகப் பெறப்படும் 552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.

அந்தத் திட்டத்தின் கீழ் பேலியகொட, மொரட்டுவை, தெமட்டகொட, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்கள் மூலம் விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை வீடமைப்பு நிர்மாணத் திட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.