10 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம்போன 10 ரொட்டி!

 


இறுதி சடங்கில்  10 ரொட்டிகளும் மென் பானம் ஒன்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள சமபவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது மாத்தளை பகமூனபகுதியில் மரண நிகழ்வொன்று இடம்பெற்ற வேளையில் இறுதி சடங்கிற்கு முன்னர் சிலர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்த்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் 10 ரொட்டிகளையும் மென்பான போத்தல் ஒன்றினையும் மரண நிகழ்விற்கு வருகை தந்தவர்களிடம் ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, மரண நிகழ்விற்காக வருகை தந்திருந்தவர்கள் ஒவ்வொரு விலையையும் அறிவித்துக்கொண்டிருக்கையில் வருகை தந்திருந்த ஒருவர் 10 ஆயிரம் ரூபாவை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஏலம் நிறுத்தப்பட்டு 10 ரொட்டிகளும் மென்பானமும் 10 ஆயிரம் ரூபாவை கோரியவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அவர் ஏலத்தில் பெற்றுக்கொண்ட ரொட்டிகளை அங்கிருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்த்துள்ளார்.

அதேநேரம் ஏலத்தில் கிடைத்த பணத்தினை மாணவி மரண சடங்கின் செலவீனங்களுக்காக உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.