விதைக்குண்டுகளை வீசியது விமானப்படை!!


 இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல்  மற்றும் தலைமையின்கீழ்   இலங்கை  விமானப்படையினரினால் கடந்த 2022 அக்டோபர் 29 ம்  திகதி சியாம்பலா பிரதேச  செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.


வீரவெல  இலங்கை விமானப்படை தளத்தை  மையமாக  கொண்டு இல 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை ,  மருது ,  கித்துள் உட்பட 100,000 விதைகள் வான் வழிமூலம் வீசப்பட்டன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.