அதிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!!


 2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் 700,000 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த காலப்பகுதியில் 700,733 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.


2021 ஆம் ஆண்டின் 12 மாதங்களுக்குள் 300,000 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.


2021 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 392,032 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


குறித்த தரவுகளின்படி, 2022 முதல் ஒன்பது மாதங்களுக்குள் 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.


அத்தோடு ஒகஸ்ட் மாதத்தில் 115,286. வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.