கனடாவிலிருந்து வந்த குடும்பத்தின் பரிதாப நிலை!!

 


கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய குடும்பம் ஒன்று சாப்பிடுவதற்காக கடைக்கு சென்ற நிலையில் அவர்களை ஏற்பவந்த வாகனம் திடீரென மாயமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கனடாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று யாழ்ப்பாணம் செல்வதற்காக விமான நிலையத்தில் தரித்து நின்ற ஹயஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் பயணத்தின் இடைநடுவில் உணவு உண்பதற்காக வாகனம் ஒரு கடையில் நிறுத்தப்பட்டது .

இதனையடுத்து அனைவரும் கடைக்குள் உணவு உண்டு விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் வாகனத்தின் சாரதி  வெளிநாட்டுக் குடும்பத்தின் அத்தனை உடைமைகளுடனும் காணாமல் போயிருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.