இலங்கை மின்சார சபை அதிக நஷ்டத்தில்!!

 


நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் போனஸ் வழங்க முடியாது என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரசபையும் நட்டத்தில் இயங்கும் நிறுவனம் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமானவர்களின் கைகளில் இருக்கும் வரை மூன்றாம் தரப்பினருக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த அவர், 2017ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தாம் கோரிக்கை விடுக்கும் வரையில் எவரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும், அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படும் கூற்றுகள் தவறானவை என்றும் கூறினார்.

இந்நிலையில் ஏழு, எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவ்வாறான அழுத்தங்களிற்கு ஒருபோதும் அடிபணியாது எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.