அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு!!

 


நாட்டில் மக்களின் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரசாங்க ஊழியர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலிறுயுறுத்தினார்.

இன்றையதினம் (15-12-2022) முற்பகல் பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு.

அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல.

இப்பகுதிகளில் உள்ள பைனஸ் மரங்களை அகற்றுவதற்கு முன்னர் அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

ஆங்கிலேயர்கள் இந்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கை இருக்கும்போதே தான் தேயிலையையும் பயிரிட்டனர். எனவே தவறான கருத்துக்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

இதனால் பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றுவதற்கு முன்னர் இது நீரேந்துப் பிரதேசங்களைப் பாதிக்கிறதா என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக ஆராய்தல் வேண்டும்.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, தேனுக விதானகமகே, அரவிந்த குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் மாவட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.