பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா!!
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த ஆண்டு இரண்டு உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்பட உள்ளதால், தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் சிக்கல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் பரீட்சை வினாத்தாள் மற்றும் விடைத்தாளுக்கான பற்றாக்குறை காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருப்பினும் காகிதாகித் தட்டுப்பாட்டினால் பரீட்சை பாதிக்கப்படாது எனவும், பரீட்சார்த்திகளுக்கு விடைகளை வழங்குவதற்கு தடையின்றி காகிதங்கள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை