சஹரானின் மனைவி பிணையில் விடுவிப்பு!


 ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் சஹரான் ஹாசீமின் மனைவி பாதிமா ஹாதியா நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் சஹரான் உயிரிழந்திருந்த நிலையில், அவரின் மனைவி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவர் தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெறும் நிலையில், இன்றைய தினம் நீதிமன்றத்தினால் அவர் 25,000 ரூபா பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.