மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன்!!

 


இலங்கையில் வட்டியில்லா கடன் வசதிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் போதியளவு இல்லாத மாணவர்களுக்கு, அரச சாரா பட்டப் படிப்பை மேற்கொள்கின்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக இவ்வாறு வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கான அங்கீகாரம் கடந்த 2017.04.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி தற்போது ஐந்து மாணவர் அணிகள் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுள்ளதுடன், ஆறாவது அணிக்குத் தகைமை பெறுகின்ற மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொறிமுறைக்கமைய வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கும், அதன் கீழ் ஏழாவது அணியில் 5000 மாணவர்களுக்கான வசதிகளை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.