10 பேருக்கு கண் பார்வை இழப்பு!!

 


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இத்தகவலை நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை செய்திகள் ஊடாக பரவும் தகவல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்; கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைகளின் பின்னர் நோயாளர்களின் கண்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் விஷம் கலந்தமையால் கண் பார்வை முற்றாக இழந்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் இருப்பது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

கிளினிக்குகள் முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளிகள் பார்வையை முழுமையாக இழந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் படிப்படியாக குணமடைந்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.