மேதினத்தில் கவனம் ஈர்த்த பதாகை!

 


தொழிலாளர் தினமான இன்று (01) காலை 8 மணி முதல் 12 மணி வரை தனி மனித போராட்டத்தை நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக உள்ள சந்தியில் நபர் ஒருவர் பாலத்தின் மீதேறி நடத்தினார்.

அவர் ஏந்தியிருந்த ப​தாகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களை, ‘தோட்ட காட்டான்’ ‘வத்து தெமழு’ என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும். பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் உள்ளது..

அதனைக் குறைக்க ஆட்ச்சியாளர்கள் முன் வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களை இனி வரும் காலங்களில் பண்ணையாளர்கள் எனவும், பெருந்தோட்ட பண்ணையாளர்களை இனி வரும் காலங்களில் தமிழர்கள் எனவும், அழைக்கப்பட வேண்டும் என்றார்.

இதில் , டிக்கோயா, வனராஜா தோட்டத்தில் வசிக்கும் அன்புராஜ் என்ற தொழிலாளியே இவ்வாறு தனிமனித போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்,


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.