லண்டனில் ஆயுள் தண்டனை பெற்ற இலங்கை தமிழ் இளைஞன்!!

 


 தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையில்  இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது இவர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன் (Vanushan Balakrishnan) மற்றும் இல்யாஸ் சுலைமான் (Ilyas Suleiman) ஆகிய இருவருக்கும் முறையே 24 ஆண்டும்,  21 ஆண்டும் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிஷ்மீத் சிங் தனது தாயாருடன் புகலிடம் கோரியிருந்தமை தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.