புத்தளத்தில் பாரிய தீ விபத்து!!
புத்தளம் ஜோஷப்வாஸ் மாவத்த பகுதியில் இன்றைய தினம் (20-07-2023) பிற்பகல் தீச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் நகரசபை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புத்தளம் நகரசபை தீயனைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது சுமார் மூன்று ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கரையாகியுள்ள நிலையில் தென்னை மரங்கள், தீக்கரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்மைக்காலமாக புத்தளத்தில் இவ்வாறு தீச்சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை