பிரான்சின் புறநகர் பகுதியான நெவர் பகுதியில் நடந்த தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகளின் நினைவேந்தல் நிகழ்வு – 2023

 

நெவர் பிராங்கோ தமிழ்ச் சங்கமும், நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து இன்று 05-07-2023 அன்று மாலை 3.30 மணிக்கு தமிழ்ச் சோலை பள்ளி மண்டபத்தில் தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகளின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.முதலில்தொகுப்பாளரால் தடைநீக்கிகள் பற்றிய சிறு குறிப்பு எடுத்தியம்பப்பட்டது.


பின்னர் தடைநீக்கிகளின் திருவுருவப்படங்களுக்கான பொதுச்சுடரினை நெவர் தமிழ்ச்சோலை ஆசிரியர் திருமதி.பிலிப்தாஸ் மரீனா அவர்கள் ஏற்றிவைத்தார்.அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை மணலாற்றில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை டென்சியாவின் சகோதரர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து சாவினைத் தோள்மீது…… பாடல் ஒலிக்க விடப்பட அனைவரும் சுடர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்தினர்.

பின்னர் நெவர் பிராங்கோ தமிழ்ச்சங்க பரப்புரைப் பொறுப்பாளர் செல்வி திரேசா கரிசினி அவர்களால் முதற்கரும்புலியாக வீரகாவியமான கப்டன் மில்லரின் வீர வரலாறு கூறப்பட்டப்பட்டது.நெவர் தமிழ்ச் சோலை பள்ளி மாணவனால் ‘கரும்புலி’ எனும் தலைப்பில் கவிதை வடிக்கப்பட்டது.

பின்பு ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…’

எனும் பாடல் ஒலிக்க விடப்பட்டது.இறுதியாக மாலை 5.30 மணிக்கு ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.