சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறை கோரிக்கை!!

 


கொழும்பில் சிறுமி ஒருவரை காணவில்லை என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு - தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் , காணாமல் போன சிறுயைக் கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த  காணாமல்போன சிறுமி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் 077-3715446 மற்றும் 0761611667 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.