காணாமல் போன சிறுமிகள் - உறவினர் விடுத்துள்ள வேண்டுகோள்!!

 


கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியும், மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காணாமல் போயுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த 17 வயதான பௌசூல் பாத்திமா இப்ஹா என்ற யுவதியை கடந்த 12.07.2023 புதன்கிழமையில் இருந்து காணவில்லை எனத் தெரிய வருகின்றது.

குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைசியாக பகல் 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார்.

யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள  கேட்டுக் கொள்கின்றார்கள்.

மேலும், காணாமல்போன தெமட்டகொட யுவதி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.