கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் புதியவகை போதைப்பொருள்!

 


இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொக்கெய்ன் போன்ற புதிய வகை போதைப்பொருள் மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த Mephedrone என்ற போதைப்பொருள் இன்றைய தினம் புதன்கிழமை (05-07-2023) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மூன்று மாடி வீடொன்றை புதன்கிழமை (05) காலை சுற்றிவளைத்த விசேட பொலிஸ் குழு, கோடீஸ்வர வர்த்தகரின் (29) வயதுடைய மகனைக் கைது செய்தனர்.

அவர் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்தார் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்போது சந்தேகநபரிடம் மேற்படி போதைப்பொருள் 115 கிராம் இருந்தது. சந்தேக நபர் மிகவும் கவனமாக பொம்மைகளை பொதி செய்து கொண்டிருந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வரும் மற்றுமொரு கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதுடன், அத்திடிய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்திடிய பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் (30) வயதுடையவர் எனவும் அவர் படகு மற்றும் படகு இயந்திர வியாபாரம் செய்து வருவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவில் பல வர்த்தக நிறுவனங்களை வைத்திருப்பவர் எனவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.