இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
தன்னுடைய அழைப்பிற்கு காதலன் வரமறுத்ததால் ரயிலின் முன்பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (09) காலை கண்டியிலிருந்து .பதுளை நோக்கிச் சென்ற சரக்கு ரயிலில் பாய்ந்து பெண்ணொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை - டயகம பிரதேசத்தில் வசித்து வந்த 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். எனினும் , அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை