க.பொ.த உயர்தர மாணவி மரணம்!

 


பதுளை பகுதியில், மாணவி ஒருவர் உலக்கையினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 19 வயதான விஜயகுமார் பபிலாஷினி என்ற மாணவியே தன்னுடைய வீட்டில் நேற்று (14-08-2023) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

மின்னியலாளரான தந்தை தோட்டத்தில் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், தாய் நகரத்துக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கதவுக்கும் அலுமாரிக்கும் இடையில் உலக்கை குறுக்காக இருந்துள்ளதாகவும், நாற்காலியும் அவ்விடத்தில் சரிந்து கிடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் சகோதரியும் சகோதரனும் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.