நடுவானில் விமானி மரணம் - தரையிறக்கப்பட்ட விமானம்!!

 


அமெரிக்காவிலிருந்து சிலி நாட்டிற்குச் சென்ற விமானத்தில் நடுவானில் பைலட் இறந்ததால் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

லட்டம் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 271 பயணிகளுடன் மியாமியிலிருந்து சிலி நோக்கி கிளம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட 3 மணி நேரத்தில் பைலட்டும், விமான கேப்டனுமான இவான் அண்டெளரின் ((Andaur)) உடல்நிலை நலிவடைந்தது.

கழிவறையில் நிலைகுலைந்து விழுந்த இவானுக்கு பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் கோ-பைலட் உடனடியாக விமானத்தை பனாமா நாட்டில் தரையிறக்கினார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து இவான் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

56 வயதான இவான் 25 ஆண்டுகள் பைலட்டாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.


https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.