கற்பிட்டிபகுதியில் கரையொதுங்கிய பாரிய திமிங்கிலம்!!

 


புத்தளம்- கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கிலம் ஒன்று நேற்று  (Aug 08) காலை உயிருடன் கரையொதுங்கியுள்ளது.


இவ்வாறு கரையொதிங்கிய திமிங்கிலத்தைக் கண்ட மீனவர்கள் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் குறித்த திமிங்கிலத்தை ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.


குறித்த திமிங்கிலம் Bryce's Whale இனத்தைச் சார்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.