10 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் தீப்பரவல்.!


பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


10 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பில் 9 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும் 9 குடும்பங்களை  46 பேர் வசித்துவந்த நிலையில் 33 பேர் மாப்பாக்கலை ஞானவாஹினி தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தீயினால் உடமைகள் நாசமடைந்துள்ளதுடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. 


தீயை மாப்பாக்கலை மக்களின் பாரிய பங்களிப்புடன்  போராட்டத்தின் மத்தியில் பதுளை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பகுதிகளுக்கான மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.ராமு தனராஜா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.