பெண் எழுத்தாளர் கோபிகையின் ஆறு நூல்களும் அமரர். சேனுகா துரைராசாவின் இளவரசி நூல் வெளியீடும்!!

 


தமிழ் இலக்கிய உலகில் நீண்ட காலமாகப் பயணிக்கும் பெண் எழுத்தாளுமையான கோபிகையின்

‘அன்புடன்…’,

'புழுதி’,

‘அவள்’,

எண்ணக் கிடங்கு’,

‘ககனம் கடந்த கானம்’

 ‘வல்லினம்’
ஆகிய ஆறு நூல்களின் வெளியீட்டு விழா 29.09.2024 ( வெள்ளிக்கிழமை)
 யா/ நெல்லியடி திரு. இருதயக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திரு. சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (புளியங்குளம் )
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

முதன்மை விருந்தினராக எழுத்தாளரும் யாழ் மாநகர சபை அரச சித்த மருத்துவ
வைத்தியருமான தி. சுதர்மன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் க.கிருஸ்ணகுமார், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் ச.பூலோகராஜா ஆகியோரும்,கெளரவ விருந்தினர்களாக எழுத்தாளரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான செ.மகேஷ், யா/திருஇருதய கல்லூரி அதிபர் க.ஸ்ரீஸ்குமார்,   ஓய்வுபெற்ற அதிபர் ச.கிருஸ்ணன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் , விளையாட்டு பெற்றுவிட்டார் தனுஜாவின் வரவேற்புரையைத் தொடர்ந்து   முன்னதாக தலைமை உரை இடம்பெற்றது.  தொடர்ந்து ஆசியுரையினை ஓய்வுநிலை அதிபர் திரு. இ. இராகவன் அவர்கள் வழங்கினார்.  வாழ்த்துரைகளை, கவிஞரும் ஆசிரியருமான முல்லைத்தீபன்,  உடுவிலூர் கலா மற்றும் பிரேமா ஆகியோர் வழங்கினர்.
இளவரசி நூலினை நூலின் உரிமையாளரான அமரர் சேனுகா துரைராசாவின் பேரன், பேத்தியரான திரு திருமதி மகாலிங்கம் -  டில்லிமலர் ஆகியோர் வெளியிட்டு வைக்க, ஆசிரியர் திரு. இ. ஜனதன் பெற்றுக்கொண்டார். 
 'அன்புடன்' கடித இலக்கியத் தொகுப்பிற்கான விமர்சன உரையை  கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் த. செல்வா அவர்களும் 'புழுதி'  என்ற குறு நாவலுக்கான விமர்சன உரையை வட்டக்கச்சி இராமநாதபுரம் கிழக்கு பாடசாலை தமிழ் ஆசிரியர் திரு. க. செந்தூரன் அவர்களும்  'எண்ணக் கிடங்கு ' என்கிற கட்டுரை தொகுப்பிற்கான வியர்சன உரையை ஆசிரியர் திரு.சு.க.சிந்துதாசன் அவர்களும் 'அவள்' கவிதை  தொகுப்பிற்கான விமர்சன உரையை  ஸ்ரீமதி. சுபாஷினி பிரணவன் அவர்களும் 'ககனம் கடந்த கானம்' சிறுகதை தொகுப்பிற்கான விமர்சன உரையை 'கவிஞர்.  முல்லைத்திவ்யன்'  அவர்களும் வல்லினம் நாவலுக்கான விமர்சன உரையை வவுனியா - தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் திருமதி. பத்மாவதி ஜெயச்சந்திரன் அவர்களும் வழங்கியிருந்தனர்.பிரதம விருந்தினர் உரை, மற்றும் சிறப்பு விருந்தினர் உரைகளைத் தொடர்ந்து நூலாசிரியரின்  நன்றிக்கவியுடன் விழா இனிதே நிறைவுற்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.