கொழும்பில் போக்குவரத்து தடை - வெளியான அறிவிப்பு!!


2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி,  செப்டம்பர் 9, 10, 12, 14, 15 மற்றும் 17 ஆகிய.போட்டி நடைபெறும் திகதிகளில் ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள சில வீதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டி நடைபெறும் நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.