உயிர்த்தெழுதலும் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம்!!

 


2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா  ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்


*இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ஹபரணவுக்கு வரச் சொன்னார்.* 

*மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்கள் என்னிடமும் பிள்ளையானிடமும் அரசாங்கம் மாறி விட்டது.* 

*எந்த நேரமும் என்னவும் நடக்கலாம்.* *ஆயுதங்களை ஒளியுங்கள்* 

*தன்னையும் இடம் மாற்றலாம்.* 

*இராணுவ சம்பளம் சிலவேளை  தொகையாகக் கொடுக்க விட மாட்டார்கள் .* 

*ஆட்களுக்கு நேரடியாகத்தான் கொடுக்க வேண்டி வரும் என பல விடயங்களை சொன்னார் .*


*எதற்கும் 15 பொய்  பெயர்களை எழுதித்தாருங்கள் .* 

*அந்த பெயர்களை இராணுவ சம்பள பட்டியலில்  சேர்த்து விடுகிறேன் என நம்பிக்கை தந்தார்* *பொய்ப் பெயர்களை எங்களுக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி மொகமட்டுக்கு*  *அனுப்பி இருந்தேன்   எங்களுக்கு இராணுவ சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது* 


*2015 பொதுத்தேர்தலிற்கு பின்னர்  பிள்ளையானை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.*

*5 மாதம் 4ம் மாடியில் வைத்திருந்தார்கள் நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக் கிழமையும் அனுமதி பெற்றுச் சந்திப்பேன்.*  

5 மாதங்களுக்குப் பிறகு பிள்ளையானை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினார்கள்.*


*பிள்ளையானுக்கு  வழக்காட சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய  பசில் ராஜபக்சவிடம்   உதவி பெறும்படி சுரேஸ் சாலே  அறிவுறுத்தி இருந்தார்* 

*இதற்கிடையில் சுரேஸ் சாலே மலேசியா தூதரகத்துக்கு பாதுகாப்பு பிரதானியாக இடம் மாற்றப்பட்டார்.*


*ஜனாதிபதி சட்டத்தரணி  அணில் சில்வா அவர்களை பசில் ராஜபக்சே  ஏற்பாடு செய்து தந்தார்* 

*பிள்ளையான் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது .* 

  *வழக்கினை முன்கூட்டியே முடிக்க ஒத்துழைக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார் சுரேஸ் சாலே.*

*வழக்கு தவணையின் போது நேரம்  கேட்டு ஒத்திவையுங்கள் என சொல்லி இருந்தார்*   

*நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்தோம்.* 


*நான் ஒவ்வொரு வாரமும் அனுமதி பெற்று பிள்ளையானைப் போய்ப் பார்த்தேன்.* 

*மட்டக்களப்பு  சிறைச்சாலையில்  பிள்ளையானுக்கு தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள்.* 

*பிள்ளையான் சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார்.* 

*அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன்.* 

*அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைப்பார்.*


 *2017 ஆவணி மாதம்  சந்திக்கப் போன போது பிள்ளையான் சிறையில் தங்க வைக்கப்பட்டு இருந்த காத்தான்குடி முஸ்லீம் நபர்களை என்னை சந்திக்கும் படி சொன்னார்* 

*2017 ஆவணி மாதம்  2 வது கிழமை  சிறைச்சாலைச் அத்தியட்சர்  அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார்.* 

நானும் பிள்ளையானும் அவரும் சந்தித்தோம்*  


*அவர் தன் பேர் சைனி மௌலவி என்று சொன்னார்.( தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர்  சஹரான் மௌலவியின்  சகோதரர்.).* 


*சில சம்பாஷணைகளுக்கு  பிறகு அவர் போய்விட்டார்.* 

*சந்திப்புக்கு பின்னர் இவர்கள் கடும்* *விஷயமான ஆக்கள் என பிள்ளையான்  சொன்னார் இவர்கள்  வழக்கு முடிந்து வெளியில் வருவாங்கள்.* 

*கஷ்டத்தில் இருக்கிறார்கள.* *அவர்களுக்கு உதவி செய்வோம் .* 

*அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள் என சொன்னார்*


https://chat.whatsapp.com/ERua3OKxkbnI5oxvRq0L4I


*குறிப்பாக சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50,000 கொடுக்க சொன்னார் .* 

*அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார்.*  


*நான் எங்கள் காரியாலயம் மட்டக்கிளப்பு லேக் றோட்டில் இருக்கு.* *அங்கு வரச் சொன்னேன்.*

*அங்கு அவர் வந்தார். அவருக்கு ரூபா 50,000 கொடுத்தேன்.* 


*சம நேரத்தில் பிள்ளையான் சுரேஸ் சாலே யோடு  2 முறை தொலைபேசியில் கதைத்தார் 2017 புரட்டாதி முதல் கிழமை சுரேஸ் சாலே  பிள்ளையானைச் சந்திப்பதற்கு  சில்வா என்கிற ஒருவரை அனுப்பி இருந்தார்  அந்த நபர்  எங்கள் காரியாலயத்துக்கு வந்தார்.* 

*நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம்.* 

*சில்வா  தமிழ் நன்றாகக் கதைத்தார்.* 

*சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன்.* 


*20 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தந்தார்கள்.* 

*20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலங்கள் ஆகியும் கதையை நிறத்தவில்லை.* *சிறைக்காவலாளி தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார்.* 

*நான்  பிள்ளையானும் சில்வாவும் கதைத்து கொண்டுவிருந்த சிறை அறைக்குள் புகுந்ததன் பின்னரே  அவர்கள் கதைப்பதை நிறுத்தினார்கள் .* 


*அதன் பின் அவரைச் சந்திக்கவில்லை. சில்வா வந்து போன பிறகு மேற்குறிப்பிட்ட முஸ்லீம் ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும்.* 

*காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ண பிள்ளையான் சொன்னார் .* 

*ரூபா இரண்டரை லட்சமளவில் வேண்டும்.* 

*சுரேஸ் சாலேயிடம்  கேட்க வேண்டும் என்று பிள்ளையான் சொன்னார்.* 

*நான் சுரேஸ் சாலேயிடம்  பிணையெடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன்.* 

*சுரேஸ் சாலே தான் மொகமட் அவர்களிடம்  சொல்லி ஒழுங்கு பண்ணுகிறன் என்று சொன்னார்.* 


*எங்கள் செப்டம்பர் மாதச் சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப் பட்டது.* 

*நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன்.* 

*பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி ராசிக் ஐ  ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன்.* 


*அவர்கள் 24.10.2017 பிணையில் வெளியில் வந்தார்கள்.* 

*2018 ஜனவரி மாத கடைசியில் மேற்படி  பிணையில் வந்தவர்களைச் சுரேஸ் சாலே  சந்திக்க விரும்புவதாகப் பிள்ளையான் சொன்னார்.*

*அந்தக் கலந்துரையாடலுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுக்க சொன்னார் .* 

*அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார்.* *இராணுவ வாகனத்தில் போக அறிவுறுத்தினார்* 


*நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி எனக்கு இப்படி ஒரு கூட்டம்  இருக்கு.* *நீங்கள் உங்கடை ஆட்களைக் கூட்டிக் கொண்டு வர சொல்லி இருந்தேன்  தனக்குப் பிள்ளையான் ஏற்கனவே தொலைபேசியில் சொன்னதாகச் சொன்னார்.* 

*சுரேஸ் சாலே  தொலைபேசி எடுத்தார். தானும் வந்து கொண்டிருக்கிறேன் என உறுதிப்படுத்தினார்* 


*புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலைபோல் வளர்ந்திருந்த தோட்டத்தில் கூட்டம் ஒழுங்கு படுத்த பட்டு இருந்தது .* 

*அங்கு எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும்.* 

*சைனி மௌலவி தான் எனக்கு  தனது சகோதரரை அறிமுகப் படுத்தினார்.* 


*அவர் தனது பெயர் சஹ்ரான் என்று சொன்னார்.* 

*சுரேஸ் சாலே அவர்களிடம் சஹ்ரான் மௌலவியை  நான்  தான் அறிமுகப் படுத்தினேன்* 


*இவரைப் பற்றி ( சுரேஷ் சாலே ) நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சஹ்ரான் சொன்னார்.* 

*உடனேயே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுழைந்தார்கள் .* 

*அங்கு  கதிரைகள் போட்டு எல்லாம்  இருந்தது. நான் போகவில்லை.* *என்னைக் கூப்பிடவும் இல்லை.* 

*நான் வெளியில் நின்றிருந்தேன்.* *கூட்டம்  3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது.* 

*நான் வெளியிலே காத்துக் கொண்டிருந்தேன்.* 


*கூட்டத்திற்கு பிறகு சுரேஷ் சாலே  தனியாக என்னைக் கூப்பிட்டு எனக்குச் சொன்னார்.* *பிள்ளையான் சிறையிலிருந்தும் வழக்கிலிருந்தும் வெளியிலை வாறதென்றால் கோத்தபாயா  ஜனாதிபதியாக வந்தால் மாத்திரம்தான் முடியும்.*  

*இல்லாவிட்டால் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டி வரும் என எச்சரித்தார் .* 


*அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து  நடந்த விபரங்கள் எல்லாவற்றையும் சொன்னேன்.* 

*பிள்ளையான் கோத்தபாயாவை வெல்ல வைக்கிறதுக்கு சுரேஸ் சாலே  பெரிய பிளானில் வேலை செய்கிறார்.* 

*நாங்கள் அதுக்கு உதவி செய்ய வேணும். அப்பதான் நான் வெளியிலை வரலாம் என சொன்னார்* 


*11.2.2018 செப்டம்பரில் எங்கள் எல்லோரையும் சந்திக்க கோட்டபாய  வரச் சொன்னார்.* 

*நான், பிரசாந்தன், தேவராஜ், இனியபாரதி ஆகியோர் கொகுவலை வீட்டில் கோட்டாபய அவர்களை சந்தித்தோம் அங்கு  ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண விராதனை இருந்தார்.* 

*அந்தக் கூட்டத்தில் கோத்தபாயா  நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் பிள்ளையானை விடுவிக்க முடியும் என்றும் தனக்காக முழுமையாக வேலை செய்யுங்கோ என்றும் சொன்னார்* 


*மேற்படி சந்திப்பு  நடந்து 2 மாதத்துக்குப் பிறகு, சுரேஸ் சாலையும் சஹிரானும் வனாத்துமுல்லையில் சந்தித்து 14 மாதங்களின் பின்; ஜனாதிபதி தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன் உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடந்தது.* 


*இதன் போது நான் மட்டக்களப்பில் இருந்தேன்.*


*நான் உடனடியாகப் பிள்ளையானைச் சந்திக்கப் 11 மணிக்குப் போனேன்.* 


*பிள்ளையானுக்கு நான் போவதற்கு முன்னர் எல்லாம் தெரிந்திருந்தது.* 


*யாருக்கும் ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான்  நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்*


*இது எங்களுடைய கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும்.  சுரேஸ் சாலே கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும்.*


*இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும் என சொன்னார்...*


 *ஐப்பசி 15, 2021 தேதி  சுரேஸ் சாலே அவர்களை கோத்தபாயா அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் சந்தித்தேன்* 


*தனது அறைக்குள் வைத்துத் தனது  கணனியில் பாராளமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ பேசிய வீடியோவை என்னைப் பர்க்கும்படி சொன்னார்.* 


*அதே போல ஆயர் சிறில்  காமினி, அவர்கள் பேசிய   வீடியோவை பார்க்க சொன்னார்*


*பாராளமன்ற உறுப்பினர்  நளின் பண்டார  அவர்களின் வீடியோவையும் பார்க்க சொன்னார்* 


*'இவர்கள் சகரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கிறது  என சொல்லுவது பற்றி தெரியுமா என கேட்டார்* 


*நான் சஹ்ரானைச் சந்தித்தது எனக்கும் உனக்கும் பிள்ளையானுக்கும் தான் தெரியும்.* 


*நீ  தான் சொல்லியிருக்க வேண்டும்.*


*அதுக்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார்.* 


*நான் அதுபற்றி யாரோடும் கதைக்கவில்லை.* *என்னுடைய கைத்தொலைபேசியை வாங்கினார்.* 

*நான் கடவுச்சொல்லைச் சொன்னேன்.* 

*என்னுடைய கைத்தொலைபேசியைப் பூரணமாகச் சோதனை செய்தார்.*


*2007 இல் இருந்து அவரை எனக்குத்தெரியும். அவர் மிகக் கடுமையாக இருந்தது இம்முறைதான். 10 மணிக்குப் போனேன். 1 மணிக்குத்தான் வெளியே விட்டார்.*


*இவர் என்னைக் கடுமையாகச் சந்தேகிக்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது.* 


*வெளியே வந்து பிள்ளையர்னுக்குத் தொலைபேசி எடுத்தேன். சுரேஸ் சாலை என்னைக் கூப்பிட்டுக் கடுமையாக விசாரித்தார். சந்தேகப் படுகிறார். எனக்குப் பயமாகக் இருக்கின்றது என சொன்னேன்*


ஒக்டோபர் 16 ஆம் தேதி பிள்ளையான் தனியே சுரேஷ் சாலேவை  சந்தித்த விடயம் அமலன் (சாரதி) மூலமாக எனக்கு தெரியவந்தது


சுரேஷ் சாலே ஐ சந்தித்தது குறித்து பிள்ளையான் என்னிடமும் சொல்லவில்லை .


பிள்ளையானும் சுரேஷ் சாலே போல என்னை சந்தேகிக்க தொடங்கி விட்டார் போல இருந்தது


இராணுவத்தை நான் காட்டி கொடுத்ததாக அவர்கள் நினைக்க தொடங்கியதாக அஞ்ச தொடங்கினேன் .கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.