மனித பாவனைக்கு உதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை !


கம்பளையில் மனித பாவனைக்கு உதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை ஹெட்காலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


கம்பளை உலப்பனை பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் கிலோவுக்கும் அதிகமான மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை ஹெட்காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


ஹெட்காலை பொலிஸார் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினை சோதனையிட்டபோது அதற்குள் அனுமதிப்பத்திரமின்றி ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலிருந்து உலப்பனை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பத்தாயிரத்து 500 கிலோகிராம் கழிவுத் தேயிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, லொறியின் சாரதியை கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின்போதே மேற்குறிப்பிட்ட களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டது.


பின்னர் நேற்று (25) மாலை தேயிலை சபையின் கம்பளை கிளை அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் குறித்த களஞ்சியசாலையினை சோதனையிட்டதுடன், இரசாயன பரிசோதனைகளுக்காக தேயிலை மாதிரிகளையும் சேகரித்தனர் .


பொலிஸாரின் விசாரணையின்போது குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர் சமூகமளிக்காததால் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.