உனது முகம் பார்த்திட..!

 


கருங்காட்டுப் பறவையின்

தவித்தலைதலாய்
அந்திப்பொழுதுகள்
கழிகிறது
சீக்கிரமாய்
உனது முகம் பார்த்திட
உன் வாசல்தேடி வருவேன்
எனது மகிழ்ச்சி
அது உன்னில் மட்டுமே
தங்கிவிட்டது
எனது கண்ணீர்
அதுவும் உனக்காக மட்டுமே செலவாகிறது
ஆம்
ஒருவரைத்தான் நேசிக்க முடிகிறது
எனில்
அந்த ஒருவரைத்தானே
ஆயுள்வரை வெறுத்திடவும்
முடியாமல் போய்விடுகிறது
கிளை உதிர்ந்த சருகின் மீது
வந்தமர்ந்த பறவையாய்
நீ தெளித்துப்போன நேசங்களோடு
சஞ்சாரம்கொள்கிறேன்
மீண்டும் ஒரு யுகம் வேண்டி.
-பிரபா அன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.