தீ ப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!

 


கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (21-10-2023) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் இரு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள்தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததாக அதில் பயணித்த இரு இளைஞர்கள் தெரிவித்தனர்.  

இதேவேளை மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.