அரியவகை ஆழ்கடல் மீன் இனம் கண்டுபிடிப்பு!!

 


நைனாமடமவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குழுவினால் நைனாமடம பகுதியை அண்மித்த கடற்பகுதியில் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைனாமடம, வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான பல நாள் இழுவை படகு மூலம் இந்த மீன் பிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்றும் இந்த வகை மீன் உண்ணக்கூடியது அல்ல என்றும் துறைமுக முகாமையாளர் தெரிவித்துள்ளார். தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (NARA) கூற்றுப்படி,

முயல் மீன் இந்த மீன் இனமானது முயல் மீன் (Rhinochimaera atlantica - Broadnose Chimaera) என அழைக்கப்படுகிறது.

இது கனடா, கொலம்பியா, பிரான்ஸ், காம்பியா, ஐஸ்லாந்து, மொரிட்டானியா, மெக்சிகோ, நமீபியா, செனகல்,சுரினாம் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு அருகில் காணப்படுகிறது.

மிதமான கடல்களில் 1,500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இது வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் பின்னர் இந்த வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாரா தெரிவித்துள்ளது. இவ்வகையான ஒரு மீன் 140 சென்டிமீட்டருக்கும் அதிகமாக வளரக்கூடியது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.