நாட்டைவிட்டு மக்கள் வெளியேற்றம்!!
இலங்கையை விட்டு அநேகர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதை தடுக்க சில சிங்கள ஊடகங்கள், வைத்தியர்கள் கூட வெளிநாடு போய் பெட்ரோல் செட்களில் வேலை செய்கிறார்கள் என்பது போன்ற மலிவான ஒரு பரப்புரையை செய்து வருகிறார்கள்.
ஊழல் , லஞ்சத்தை விட அது ஒன்றும் மோசமானதல்ல. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தான் தொழில் ஒரு கௌரவம். மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளில் தொழில் என்பது உழைப்பு மட்டுமே.
வேலை இடத்தை விட்டு வெளியே வந்தால் , அரசனும் ஆண்டியும் ஒன்று. ஒரே மேசையில் உட்கார்ந்து சாப்பிடலாம். ஏன்? படுக்கை அறையில் கூட உறவு கொள்ளலாம்.
இதைவிட என்னடா சமத்துவம்? வெளிநாட்டில் மலசல கூடம் கழுவியவன் பணத்தோடு செல்வந்தனாக வந்தால் , அவனை பார்க்க காத்திருப்பது நீதானே தவிர , அவனல்ல? இதை எழுதும் போது இன்னொரு கதையை இலவச இணைப்பு போல எழுத தோன்றியது.
1983 தமிழருக்கு எதிரான இனக் கலவரம் நடந்து , தமிழர்கள் மிஞ்சியதை எல்லாம் கொள்ளை லாபத்துக்கு விற்று வெளிநாடுகளுக்கு ஓடும் போது , JR விமான நிலையத்தில் யாரையும் தடுக்க வேண்டாம். போகிறவனுகள் போகட்டும்.
தமிழர்கள் குறைந்தாலே பெரிய நிம்மதி என்றாராம். அப்படி வெளியே போன தமிழர்களால்தான் அரசுக்கு இன்றுவரை அதிக தலையிடி. அதே தமிழர்களிடம்தான் இன்று அரசு பிச்சை வாங்குகிறது.
அடித்து , கத்தி உரிமையை பெறுவதை விட காசைக் கொடுத்து உரிமைக்கு மேல கூட பெறலாம். அது சிலருக்கு புரியவில்லை. ஊர்வலத்துக்கும் , போராட்டத்துக்கும் செலவு செய்யும் பணத்தில் தமிழர்கள் நினைத்தால் என்னென்னமோ செய்யலாம்.
இதற்கு நாடாளுமன்றமே செல்ல வேண்டியதில்லை. உதாரணமாக : நான் சுகவீனமாக இருப்பதால் , எனது வீட்டை மாதத்தில் 2 நாட்கள் துப்புரவு செய்து தரும் பெண் ஒரு சுவிஸ் ஆசிரியை. அது அவர் செய்யும் மனித நேய பணி.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை