குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு!!


சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு அமைச்சரவை அனுமதியுடன் இலவச விசா நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


நாட்டின்  சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக, 31 மார்ச் 2024 வரை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


மேற்படி பரிந்துரைக்கப்பட்ட நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது விவகாரங்கள், சேவை மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விசா இல்லாத சேவையை அனுபவிக்க தகுதியுடையவர்கள் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மேற்கூறிய பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் 31.03.2024 வரை இலவசமாக வழங்கப்படுவதற்கு உட்பட்டு இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்கு (ETA) விண்ணப்பிக்க வேண்டும்.


இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் இலவச விசா காலத்தை அனுபவிக்க முடியும் மற்றும் இலங்கைக்கு முதலில் வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இரட்டை நுழைவு வசதி அனுமதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இந்த திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதி (ETA) 31.03.2024 வரை விண்ணப்பிக்கலாம், இந்த இலவச ETA மேலும் நீட்டிக்க முடியாது மற்றும் 30 நாட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என  கூறப்பட்டுள்ளது.




அதன்படி "வருகைத் திகதியிலிருந்து 30 நாட்கள் இலவச ETA காலம் 31.03.2024 க்குப் பிறகு காலாவதியாகும் பட்சத்தில், உரிய கட்டணத்தைச் செலுத்தி விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்" என்று அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.