புதிய களனி பாலம் தற்காலிகமாக மூடல்!


கல்யாணி தங்க நுழைவாயில் என்றழைக்கப்படும் புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி, புதிய களனி பாலம் நாளை (01.12.2023) முதல் 4ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலம் மூடப்படும் மூன்று கட்டங்கள் வருமாறு,

கட்டம் 01 – டிசம்பர் 01 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 04 (திங்கள்) 6.00 a.m.

கட்டம் 02 – டிசம்பர் 08 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 11 (திங்கள்) 6.00 a.m.

கட்டம் 03 – டிசம்பர் 15 (வெள்ளி) 9.00 p.m – டிசம்பர் 18 (திங்கள்) 6.00 a.m.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.