இடுப்பைத் தொட்டவருக்கு வைத்துச் செய்த பெண்!!

 


கொழும்பில் கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பெண் பணியாற்றும் காரியாலயம் வீட்டுக்கு நடந்துச் செல்லும் தூரத்தில் இருப்பதனால், வீட்டிலிருந்து காரியாலயத்துக்கு நடந்தே சென்று, நடந்தே வீட்டுக்கு திரும்புகிறார்.

இந்நிலையில் இன்று , செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 1.30 மணியளவில் காரியாலயத்துக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, எதிரே நடந்து வந்துக்கொண்டிருந்த இனந்தெரியாத நபர், பெண் எதிபாராத வேளை இடுப்பு பகுதியில் தொட்டுவிட்டு விரைவாக கடக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த அந்தப்பெண், கூச்சலிட்டதை அடுத்து அங்கு இருந்தவர்கள், அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்துக்கொண்டனர்.

பகலுணவு வேளை என்பதால், சம்பவம் நடத்த இடத்தில், பல நிறுவனங்கள், காரியாலயங்கள் இருப்பதால், பகலுணவை வாங்குவதற்காக பலரும் வெளியில் வந்திருந்தனர்

இதன்போது தன்னிடம் சில்மிசம் செய்தவரை , தன்னிடமிருந்த குடையால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், பெண்னின் புதுக்குடை நெளிந்துவிட்டதாம்.

எனினும் ஆத்திரம் அடங்காத பெண் தன் செருப்பையும் கழற்றி தாக்கிய நிலையில் ‘சமாவென’ (மன்னிக்கவும்) எனக் கூறிவிட்டு, ஆளைவிட்டால் போதும் சாமியென சந்தேகநபர் அங்கிருந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில் பகல் நேரம் இடம்பெற்ற இச்சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.