தனிமனித அதிகாரமும் பதவிப்பித்தர்களும் நோர்வேயில் என்ன நடக்கிறது…!


தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அன்னை பூபதி தமிழ்ப்பாடசலை எமது தமிழ்ப்பிள்ளைகளின் தாய்மொழி அறிவை 1992 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை ஊட்டிவருகின்றது அத்தோடு எமது போராட்ட வரலாறுகளையும் கடத்தி வருகின்றது.


2009 ஆம் ஆண்டு எமது விடுதலைக்கான ஆயுதவழியிலான போராட்டம் அமைதியாக்கப் பட்டதிற்கு பிற்பாடு நிர்வாகங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் நோர்வே இணைப்பாளராக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அப்போதய செயற்பாட்டளாராக இருந்தவர் நியமிக்கப்பட்டார்.


2012 ஆம் ஆண்டு வரைக்கும் சுமூகமாக வழமைபோன்று இயங்கிய நிர்வாகத்தலைமையில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்படத்தொடங்கியது அதற்கு முக்கிய காரணம் 2009 வரை பாடசாலையின் கணக்கு விபரங்களை கண்காணித்து வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்கு 2009 இற்கு பின்பு நியமியக்கப்பட்ட நிர்வகியிடம் கணக்கு விபரம் கேட்கப்பட்டமை முக்கிய காரணம்.


தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமிருந்து தொடர்புகளை துண்டித்து தனிமனித அதிகாரத்துக்குள் தமிழ்த்தேசிய பாடசாலையை கையகப்படுத்தியதோடு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றேர்ர்கள் மீதும் வெறுப்புணர்வை தூண்டும் தகாத செயற்பாடுகளை உருவாக்கி வந்தார்.


இதனால் இவரோடு எப்படியாவது பேச்சுவார்த்தையை மேற்கொண்டு சுமூகமான உறவை குமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காய் போக நேரடியாக பாடசாலைக்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள் சென்றபோது தங்களுக்கு அடிக்க வந்தார்கள் என்ற திட்டமிட்ட பொய்பிரச்சாரத்தை மேற்கொண்டு செயற்பாட்டாளர்கள் உணர்வாளர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவித்து தன்னுடைய தனிமனித அதிகாரத்துக்கு வாய்புநிலையை ஏதுவாகக்க நாடகமாடினார்.


இந்த நிலையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  பாடசாலையின் நலன் கருதி சற்று  பொறுமையோடு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் சில சமாதான குழுவுகள் தன்னார்வத்தோடு முரண்பாடுகளை தீர்பதற்கு முயற்சித்தபோதும் தனியொருவரால் எல்லாமே தீர்வற்ற நிலையை உருவாக்கியது.இதற்கடையில் தலைமை நிர்வாகியின் தனிப்பட்ட அதிகார எல்லை மீறலால் பல பிள்ளைகள் கல்வியை தொடரமுடியாத நிலையும் ஆசிரியர்களை அவமானப்படுத்தி வெளியேற்று படலமும் கேள்வி கேட்கும் நிர்வாகிகளை வெளியேற்றி தனக்கு சார்புடையவர்களை பதவிகளில் இருத்துவதுமென இவரின்  அதிகார எல்லை மீறல்கள் அதிகரித்தவேளை முதன் முதலாக தமிழ்ப்பாடசாலைக்கு எதிராக நியாயம் கேட்டு தமிழ் மக்கள் போராடும் அவல நிலையை உருவாக்கினார் தற்போதைய அன்னை தலைகை நிர்வாகியும் றொம்மன் அன்னை வளாக உறுப்பினருமென இரண்டை நிர்வாக பதவிமோகத்தில் திளைக்கும் அதிகாரி, அதுமட்டுமல்லாது பாடசாலையின் கணக்கு முதல் அத்தனை அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற இவரின் போக்கில் இன்று சந்தேகம் எழுந்திருப்பதும் தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டுள்ளது.

 

 


பெற்றோர் பாடசாலைக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம்இந்த நிலையில் இவரின் தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கு எதிரான செயற்பாடுகளும் கட்டுக்கோப்பான செயற்பாடுகளை அழிக்கும் நிலைப்பாடும் முனைப்பு பெற்று வரும் நிலையில் இவரின் குந்தகமான செயற்பாடுகளை நிறுத்தக்கோரி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவரால் பாதிக்கப்பட்டவர்களையும் நோர்வே தமிழ்முரசம் வானொலி நேர்காணல் கண்டது.

 இதனைத்தொடர்ந்து மீண்டும் தன்னார்வ இணக்கப்பாட்டுக்குழு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடம் வந்தபோது இன்முகத்தோடு வரவேற்று அன்னை தலைமை நிர்வாகி வெளியேறி புதியவர்களுக்கு வழிவிட்டால் எல்லாப்பிரச்சனைகளும் சுமூகமாக முடிவடையும் என்று சொல்லப்பட்டது பேசிவிட்டு வருகின்றோம் என்று கூறிச்சென்ற இணைக்கப்பாட்டுக்குழுவினர்.

மீண்டும் வந்தார்கள் அதுவும் சிங்கள அரசால் இதுவரையும் நோர்வேயில் செய்ய முடியாத காரியத்தை ஒரு தமிழன் தன் அதிகாரத்தின் உச்ச பாவத்தை கோரிக்கையாக வைத்த நிபந்தகைகளோடு அமர்ந்தார்கள்.

 

       


அன்னைத்தலைமை நிர்வாகி பெற்றோரை மிரட்டும் காட்சி


இந்த காலகட்டத்தில் விடுதலைக்கா துணிந்து நின்று போராட பல காரணங்களால் பின்னிப்பவர்கள் மத்தியில் துணந்து நின்று போராடும் நான்கு செயற்பாட்டாளர்கள் தேசியப்பணியை விட்டு வெளியேறினால் அன்னைத்தலைமை நிர்வாகி வெளியேறுவாதக தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக சொன்னார்கள் அதற்கு எந்த விதத்திலும் மறுப்புத்தெரிவிக்காது தமிழ்த்தேசிய அமைப்புகளின் பிணக்கை தங்களை பணயம் வைத்தே தீர்க்கலாம் என்ற நப்பாசையோடு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர், நிதிப்பொறுப்பாளர், தொலைக்காட்சி பொறுப்பாளர், தமிழ்முரசம் வானொலிப் பணிப்பாளர் ஆகிய நால்வரும் தேசியப்பணியை விட்டு வெளியேற சம்மதித்ததோடு அன்னைத்தலைமை நிர்வாகிக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நிபந்தனை வைக்கப்பட்டது, அது அவர் அனைத்து நிர்வாகங்களிலும் இருந்து வெளியேறவேண்டும் என்பதே  ஆனால் இறுதி நேரத்தில் அன்னைத் தலைமை நிர்வாகியால் இணக்கப்பாட்டுக்குழுவினரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் ஏமாற்றப்பட்டனர்.


இவற்றை தொடர்ந்து அன்னைபூபதி தமிழ்ப்பாடசாலைத்தளங்கள் உட்ப்பட அநாமதேய குழுமங்களிலும விடுதலை அமைப்புகளுக்கான பொய்யான விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை நோர்வே வாழ் தமிழ் மக்கள் அறிவார்கள்.

 


பாடசாலை கல்விப்பொறுப்பாளரால் மேற்கொண்ட பரப்புரைஇந்த அமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் வன்மமான பிரச்சாரங்களுக்கு விடுதலை போராட்டத்திற்கு எதிரான சக்திகளை வைத்தும் துரோகிகளை வைத்தும் அன்னைத்தலைமை நிர்வாகி அதுவும் தமிழ்தேசியப்பாடசாலையின் நிர்வாகி பிள்ளைகளுக்கு நற்சிந்தனைகளை கற்பிக்கின்ற  அதிமேல் நிலையில் இருகிக்கின்ற  அதிகாரி மிகவும் கீழ்த்தரமான பிரச்சாரங்களையும் தனிநபர்கள் மீதான பொய் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.


 

தமிழர் வள ஆலோசனை மையத்தின் இணைப்பாளர் குழுமத்தில் அன்னை பூபதி கல்விப்பொறுப்பாளரால் எழுதப்பட்ட  வாசகம்.

இந்நிலையில் எமது எதிர்கால சந்ததிகளின் கல்வியும் சமூக நல்லொழுக்கும் எப்படியான வளர்ச்சியை நோக்கிச்செல்லப்போகின்றது என்ற அச்சஉணர்வு மேலும் அதிகரித்துள்ளது..

 


ஊடகப்பணியாளருக்கு விடப்பட்ட கொலை அச்சுறுத்தல்


இப்போது அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் நடப்பாண்டு பெற்றோர்களால் நோர்வே சட்டத்திற்கு உட்பட்டு நிர்வாகத்தினை மாற்றுவாதற்கான முயற்சிகள் பலரின் ஓயாத செயற்பாடுகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


தொடர்ச்சியான கூட்டங்களை ஒழுங்குபடுத்தி விளிப்புணர்வுகளை ஏற்படுத்திவரும் நிலையில் பெற்றோர்கள் தவறான நிர்வாகத்தின் செயற்பாடுகளை நன்கு புரிந்து கொண்டு பேராதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில் தொடர்ந்தும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பெற்றோர்கள் மீதும் கேள்வி கேட்போர் மீதும் சில ஏவல்களை உருவாக்கி அவதூறுகளை பரப்பிவரும் அன்னைத்தலைமை நிர்வாகியின் கபடநாடகம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.இதற்கெல்லாம் ஒரே வழி நோர்வே அன்னைபூபதி தமிழ்கலைக்கூட நடப்பாண்டு பெற்றோர்கள் முன்னெடுத்துள்ள சட்டரீதியான அணுகுமுறைக்கு அனைத்து மக்களும் ஆதரவளித்து அன்னைத்தலைமை நிர்வாகியையும் சலுகைகளுக்காக தனிமனிதனுக்கு ஆலவட்டம் பிடிக்கும் குறுகிய சிந்தனை கொண்டவர்களையும் காத்திரமான கல்விப்பணியில் இருந்து களை புடுங்குவதே காலத்தின் கட்டாயம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.