2023 ஆம் ஆண்டு 120 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக IFJ அறிக்கை

 கடந்த 2023 ஆம் ஆண்டில் 11 பெண்கள் உட்பட 120 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, 94 கொலைகளை ஆவணப்படுத்தி கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் ஆரம்பப் பட்டியலை வெளியிட்ட IFJ, சமீபத்திய அதிகரிப்பு காசா போரில் கூடுதலான மரணங்கள் மற்றும் கூட்டமைப்பிற்கு தெரியப்படுத்தப்பட்ட பிற கொலைகளின் விளைவு என்று தெரிவித்துள்ளது. மேலும், உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்களில் 68% பேர் காசா மோதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஐரோப்பாவில், 3 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில், 75 பாலஸ்தீனியர்கள், 04 இஸ்ரேலியர்கள், 03 லெபனான் ஊடகவியலாளர்கள் காசாவில் போரின் விளைவாக கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிரியாவில் 3 ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா (03), ஆப்கானிஸ்தான் (02), பிலிப்பைன்ஸ் (02), வங்கதேசம் (02), பாகிஸ்தான் (02) அல்லது சீனா (01) என 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில், 2023இல் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க சர்வதேச பிணைப்பு மாநாட்டை விரைவாக ஏற்றுக்கொள்ளுமாறு, உலக அரசாங்கங்களுக்கு IFJ அழைப்பு விடுத்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.