நுவரெலியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மத்திய நிலையம்!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் இன்றைய தினம் (07.01.2024) ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி நுவரெலியா மாவட்டத்தில் கடந்த (18.12.2023) ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது அப்பகுதி சிறார்களினால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் 05 ஆம் மாடியில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பணியகத்தின் பதிவுகளை பெற்றுக்கொள்ளல், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தல், பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் வழங்கல் என்பன இந்த புதிய மத்திய நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை