காதலால் வந்த மோதல்!!

 


காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி - திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.