சுமந்திரனின் எடுபிடி சாணக்கியனுக்கு சுயநிர்ணயம் என்றால் என்ன என்று தெரியுமா - சிவாஜி சீற்றம்!


சுமந்திரனின் எடுபிடியாகவும், வாலாகவுமே சாணக்கியன் செயற்படுகின்றார். நான் சாணக்கியனை பார்த்துக் கேட்கிறேன் சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? சுய நிர்ணய உரிமையை எப்படி பாவிப்பது தெரியுமா என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.


யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஊடகவியலாளர் ஒருவர் "பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் பொது வேட்பாளர் ஒரு தேவையற்ற விடயம் என்றும் அதனை ஒரு சிலர் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிகின்றார்கள் என்றும் ஒரு கருத்தை மட்டக்களப்பிலே தெரிவித்துள்ளார். 


இதுபற்றி தங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


மக்கள் தங்களது தலைவிதி எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதே பொதுமக்கள் வாக்கெடுப்பு. சாணக்கியனுக்கு தற்போது 60 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதை விட மேலாலும் கீழாலும் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் ஆரம்பிக்கும் போது இவர்களால் முடியாது என்று கூறப்பட்டது. முப்படைகளையும் கொண்டு வந்து, ஒரு நடைமுறை அரசாங்கத்தை கட்டி எழுப்பி, இன்று சர்வதேச ரீதியில் கொண்டுவரக் கூடிய அளவிற்கு போராட்டம் வளர்ந்தது. அதுபோலத்தான் ஆரம்பத்தில் முடியாது என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள். அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் சரி வராது.


இனப்படுகொலை இடம்பெற்றது, சர்வதேச நீதி வேண்டும் என்ற கோரிக்கையை இன்று எத்தனையோ நாட்டு பிரதமர்கள் பேசும் அளவிற்கு வந்திருக்கின்றார்கள் என்றால், அமெரிக்கா காங்கிரஸிலேயே ஒரு சுதந்திரத்துக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டும் என்று 10 பேருடன் ஒரு தீர்மானம் வந்திருக்கிறது என்றால் அந்தத் தீர்மானம் நிறைவேறும் என்பதற்கு அனுசரணையாகவும் சாதகமாகவும் செயல்பட வேண்டும். 


அதை விட்டு நாங்கள் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டு திருப்பவும் அடி வேண்டிக்கொண்டு இருக்க முடியாது. தங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் கேட்டால் தான் மற்றவர்கள் எங்களுக்கு உதவ முன்வருவார்கள்.


13 குறைந்து குறைந்து மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. ஏமாறுவதற்கும் ஒரு அளவு வேண்டும். இதனை அவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றார்கள்.


2010ல் சரத் பொன்சேகாவை நம்பி ஆதரவு தெரிவித்தீர்கள். இன்று அவர் அடிவாங்கிய காரை கொண்டு செல்கின்றார் ஆள் இல்லையாம் என்று. 2015இல் அன்னப் பட்சிக்கு ஆதரவு தெரிவித்து வென்றீர்கள். அவரை ஏற்க வேண்டாம் என நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் வைத்து பகிரங்கமாக கூறினேன். அமெரிக்கா - இந்தியாவின் ஆதரவுடன் ஒரு தீர்மானத்தில் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் முடியாது என்று கூறினீர்கள். இன்றைக்கு ஏமாற்றப்பட்டுள்ளீர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.