முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் மீது அதிகரிக்கும் மேன்முறையீடு.!


முல்லைத்தீவு வலையக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன் மீது அதிக அளவிலான தகவல் அறியும் உரிமைச் சட்ட மேன் முறையீடுகள் ஆணைக் குழுவுக்கு பதிவாகி வருகிறது.


குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது முல்லத்தீவு வலையக் கல்விப் பணிப்பாளராக தமிழ் மாறன் கடமையாற்றின் நிலையில் உள்ள தீவு கல்வி வலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் பலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.


எனினும்  அவர்கள் வழங்கும் கேள்விகளுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் உரிய காலத்துக்குள் பதில் வழங்காத காரணத்தினால் பலர் தமது மேன் முறையெடுகளை ஆணைக்குழுவிற்கு வழங்கி வருகின்றனர்.


அண்மைக் காலமாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் சில பாடசாலைகளில் ஊழல் முறைகேடுகள் அம்பலப்படுத்த பண்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


இன் நிலையில் குறித்த  ஊழல் முறைகேடுகளுடன் வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் தொடர்பு உள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும்  குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் .


தகவல்களை மறைப்பதற்காக வா வலயக்கல்விப் பணிப்பாளர் தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விகளுக்கு பதில் வழங்காது தட்டிக் கழித்து வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.