ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் வூப்பெற்றால்!📸🎦
யேர்மனியில் வூப்பெற்றால் நகரி்ல் அமைந்துள்ள ஸ்ரீ நவதுர்காதேவி ஆலயத்தில் இன்று 07.08.2024 ஆடிப்பூரம் பூசை வெகு சிறப்பாக இடம்பெற்றது.அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி காட்சியளித்தா.
ஆடிப் பூரம் அம்பாளுக்குரிய விசேட நாளாகும். ஆடித் திங்களில் வரும் பூர நாளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை