லெப்.கேணல் செட்டி நினைவு நாள்!
கட்டுநாயக்க வானூர்தித் தளத் தாக்குதலுக்கான வேவுப் பணியின்போது, சிறிலங்காப் படையினரால் கைதாகும் நிலையில் தப்பியோடி, வெதுப்பகப் போறணைக்குள் குதித்துத் தன்னை அழித்து வீரகாவியமான புலனாய்வுத்துறையின் மறைமுகச் செயற்பாட்டாளர் லெப். கேணல் செட்டி அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளாகும்.
தனது வழமையான பணிகளுக்காக, நீர்கொழும்பில் தமிழ்பேசும் சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஊர்தி ஒன்றைப் பெற்றுப் பயன்படுத்திவந்தார். இதனை மோப்பம் பிடித்த சிறிலங்காப் புலனாய்வுத்துறை, 20.09.2000 அன்று அந்த ஊர்திக்குள் மறைந்திருந்தது. லெப். கேணல் செட்டி அவர்கள் அவ்வூர்தியில் ஏறியவேளை, அவரைக் கைது செய்ய முற்பட்டது. எனினும், அவர்களின் பிடியிலிருந்து ஒருவாறு தப்பி ஓடி, அருகிலிருந்த வெதுப்பகத்தின் போறணைக்குள் பாய்ந்து, போறாணையின் தணலில் தன்னைத் தானே அழித்து வீரகாவியமானார்.
இவர் இவ்வாறு எதிரியிடம் பிடிபடாமல் தன்னை அழித்துக் கொண்டதாலேயே, கட்டுநாயக்க வானூர்தித் தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் எதிரிக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு, அத்தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், சிறிலங்காப் வான்படைக்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட இந்த வீரமறவனை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்வோம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை