2012 போல மீண்டும் கலவரத்தை நோக்கிச் செல்கிறதா ஐரோப்பா?
பிரான்சில் வெடிக்கும் மக்கள் போராட்டங்கள் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன!
ஜனநாயகம், மனித உரிமைகள், பொருளாதார வளர்ச்சி என உலகுக்கே முன்னுதாரணமாகத் காட்டிக்கொள்ளும் ஐரோப்பாவின் வீதிகள் மீண்டும் மக்கள் போராட்டங்களால் அதிரத் தொடங்கியுள்ளன.
பிரான்சில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, கல்வித்துறையின் குறைபாடுகள், பொதுச் சேவைகள் மீதான அதிருப்தி என்பன மக்களை வீதிக்கு அழைத்து வந்துள்ளன. சில இடங்களில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
இந்தக் காட்சிகள் 2012ஆம் ஆண்டில் ஐரோப்பாவை உலுக்கிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் எழுச்சிகளையும் நினைவுபடுத்துகின்றன.
அன்று கிரீஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, சம்பளக் குறைப்பு, அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகள் என்பவற்றுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினார்கள்.
இன்று, 14 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரச்சினைகளின் வடிவம் மாறியிருந்தாலும் மக்களின் அடிப்படைக் கேள்விகள் பெரிதாக மாறவில்லை.
உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமை ஏன் அதிகரிக்கிறது? இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்? பொருளாதார வளர்ச்சியின் பலன் சாதாரண மக்களைச் சென்றடைகிறதா?
பிரான்சில் இன்று எழுந்துள்ள போராட்டங்கள் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட வேண்டியவை அல்ல. அவற்றின் பின்னால் ஆழமான சமூக, பொருளாதாரக் கேள்விகளும் உள்ளன.
அதேவேளை, பிரான்சின் போராட்டங்கள் ஐரோப்பா முழுவதும் கலவரமாக மாறும் என்று இப்போதே தீர்மானிக்க முடியாது.
ஆனால் வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடம் ஒன்று இருக்கிறது.
மக்களின் பொருளாதாரச் சுமைகளும் எதிர்காலம் குறித்த அச்சங்களும் நீண்டகாலம் தீர்க்கப்படாமல் போகும்போது, அவை பெரும் சமூகக் கொந்தளிப்புகளாக மாறக்கூடும்.
2012இல் பொருளாதார நெருக்கடி மக்களை வீதிக்கு அழைத்து வந்தது.
2026இல் வாழ்க்கைச் செலவும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் மீண்டும் மக்களை வீதிகளில் திரளச் செய்கின்றன.
வரலாறு மீண்டும் திரும்புகிறதா? அல்லது வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மற்றுமொரு எச்சரிக்கையை ஐரோப்பா எதிர்கொள்கிறதா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
– சதீஷ் | வெற்றித் தமிழா
#Europe #FranceProtests #EuropeanPolitics #PoliticalAnalysis #VettriThamizha #TamilNews #Shathiesh

.jpeg
)





கருத்துகள் இல்லை