இன்றுமுதல் மீண்டும் GSP வரிச்சலுகை!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படுகின்ற, ஜி.எஸ்.பி  வரிச் சலுகை இம்மாதம் இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 5,000 வகையான பொருட்களுக்கு, ஜி.எஸ்.பி வரிச் சலுகையை 2020ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

இதற்கமைய இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு அதன் நன்மையை இன்றுமுதல் பெற்றுக்கொள்ள முடியுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில் மீண்டும் அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.