ஹோட்டலில் இளம் நடிகை சிக்கினார்!

ஐதராபாத் (09 ஜூலை 2018): ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஐதாராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல்களில் அவ்வப்போது விபச்சாரம் நடைபெறுவது உண்டு. இந்நிலையில் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விபச்சாரம் செய்தவர்களில் இளம் நடிகை உட்பட பலர் சிக்கினார்கள்.

விபச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர், வாடிக்கையாளரான அரசு ஊழியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆக்ராவை சேர்ந்தவர் என்றும் அவரை ஜனார்தன் ராவ் என்பவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறினார்.

தற்போது தலைமறைவாக உள்ள ஜனார்தன் ராவை போலீசார் தேடி வருகின்றனர். 
Powered by Blogger.