உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

 தாயகத்தில் பல்வேறு நெருக்கடிகள்,பின்னடைவுகள்,ஆகியவற்றிக்கு மத்தியிலும்போர் உச்சக்கட்டத்தினை அடைந்த போது மீண்டும் வலிகளோடும் வேதனைகளோடும் தமிழீழத் தாகத்தோடு நாட்டின் பலபகுதிகளிலும்,தமிழர்களின்வரலாறு, அழிவு, விடுதலைப்போர், அரசியல், பொருண்மியம் என பல தரப்பட்ட தகவல்களையும், செய்திகளையும், தமிழர் நிகழ்வுகலையும் தாங்கி  வந்து தமிழர்களோடு  ஒருஉற்ற நண்பனாக, அற்புத களஞ்சியமாக, நூலகமாக திகழ்வதே எங்களின்( தமிழ் அருள் இணையத்தின்) நோக்கமாகும்.
 போர்க்  காலங்களிலும் சமாதானம் என்று சொல்லப்பட்ட காலங்களிலும் தங்களாலான மகத்தான பங்களிப்பினை ஆற்றி வந்ததுமட்டுமன்றிதற்போதும்தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணிப்புகளோடு செயற்பட்டு வரும் அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் எமது இணைய நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
 உங்களைப் போன்றுதமிழீழ விடுதலைக்கும் தமிழர்களின் சுகந்திர  வாழ்வுக்குமாக சேவையாற்றுவதோடு அதன் ஒரு பணியாக  ஊடகத்தினூடான சேவையை ஆற்றும் நாங்கள் அனைத்து தமிழ் உள்ளங்களிடமிருந்தும் ஆக்க பூர்வமான கருத்துக்களையும், ஆக்கங்களையும்,ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றோம்.
 உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள், ஆர்வலர்கள்,  படைப்பாளிகள் அனைவரிடமும் ( தமிழ் அருள் இணையம் ) ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றது.
 தமிழீழத்தின்  விடுதலைக்காக தன் கொள்கையில் உறுதியாக இருந்து நாட்டிற்கும், தனதுசமூகத்திற்கும், சேவையினை வழங்கி தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள், நாட்டு பற்றாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர்களை நினைவு கூருகின்றோம்.அவர்கள் கண்ட கனவினை நினைவாக்க பயணிப்போமாக….
 நன்றி,வணக்கம்.
தாயக நினைவுடன்,
ஆசிரியர் குழு,
Blogger இயக்குவது.