பிரதமரில் 2020 வரையில் மாற்றம் இல்லை!

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இன்று (21) அம்பேவெல ஹைலன்ட் பால் பண்ணைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பிரதேச சபைகளின் ஆட்சியமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிக சபைகளை கைப்பற்றியுள்ளது. மேலும் ஏனைய சபைகளிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அதிகளவான பிரதேச சபைகளை ஆட்சியமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுவரை பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்களே இருப்பத்துடன் ஜனாதிபதி தேர்தலின் போது ஊழலை ஒழித்து ஊழல் வாதிகளை கைது செய்வதாக கூறியே ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஐனாதிபதியானார். அந்த வாக்குறுதிக்கமைய ஊழல் வாதிகளை பிடிக்க புதிய சட்டமொன்றை உருவாக்கப்படுக்கின்றது. இதற்கு கூட்டு எதிர்கட்சியினர் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.