நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்..!

கெனியன் மின்சாரசபைக்கு நீர் வழங்கும் ஆற்றுப்பகுதியில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்த சிறுவனின் சடலம் சுழியோடிகளின் உதவியுடன் இன்று (21) காலை 10.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 7 கல்வி பயிலும் 13 விஜயகுமார் கலைரமன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

அப்புகஸ்தனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் தந்தையும் மகனும் அதி பாதுகாப்பு வலய பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மகன் நீரில் தவறி விழுந்து சுழியில் சிக்குண்ட நிலையில் மகனை காப்பாற்ற தந்தையும் நீரில் குதித்துள்ளார். 

எவ்வாறாயினும் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர்களினால் தந்தையை மட்டும் காப்பாற்ற முடிந்ததாக பலியான சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலிய பொலிஸார் நீரில் முழ்கிய சிறுவனை மீட்க கடற்படை சுழியோடிகளின் உதவியை நாடியிருந்த நிலையில் சடலம் இன்று (21) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சடலத்தை ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டபின் மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர். 
Powered by Blogger.