ஊடகங்களினூடாக பிரதமர் மீது சேறு பூசப்படுகிறது! கடந்த ஆட்சியில் இப்படி செய்திருந்தால் ஊடக பிரதானிகள் எஞ்சமாட்டார்கள்!

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றல்ல இருபத்தைந்து கொண்டுவரப்பட்டாலும் அதற்கு முகங்கொடுக்க சக்தி இருப்பதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார். தேர்தலின் பின்னர் அரசாங்கம் முடிந்துவிட்டது போன்று சிலர் செயற்பட்டதாக கூறிய அவர், 2020 வரை நாம் ஏற்ற பொறுப்புக்களை பலமுடன் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலாங்கொடை பிரதேசத்தில் நீர்ப்பாசன திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், தேர்தலின் பின்னர் அரசாங்கத்தை துரத்த முடியாதவர்கள் அரசியல் லாபம் பெறுவதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தார்கள். அதனூடாக பிரதமர் மீது சேறு பூச முயன்றார்கள். பிணை முறி குறித்து எதுவும் தெரியாதவர்கள் போன்று அதனை இணைத்து இந்த பிரேரணை முன்வைக்கப் பட்டது. இது தொடர்பான சகல சட்ட நடவடிக் கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.இதனுடன் தொடர்புள்ள இருவர் கைதாகியுள்ளனர். முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் எங்கு இருந்தாலும் அவர் பிடிபடுவார்.2015 இற்கு முன்னர் இவ்வாறான நிலைமை காணப்பட்டதா?
ஊடகங்களினூடாக பிரதமர் மீது சேறு பூசப்படுகிறது. கடந்த ஆட்சியில் அவ்வாறு நடந்தால் ஊடக பிரதானிகள் எஞ்சமாட்டார்கள்.
சுதந்திரக் கட்சி முன்னாள் செயலாளரை ஜனாதிபதியாக்கி நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தோம். நீதிமன்ற சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளோம்.
சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக 70 வருடங்கள் கடந்தும் நாம் பின்னோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.